

மதுரையில் மக்களுடன் முதல்வர் முகாமில் மனுக்கள் பெற்று உடனடி தீர்வு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக மக்களுடன் முதல்வர் என்ற முகாம் வார்டு வாரியாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் கடந்த 6 ஆம் தேதி சனி கிழமை மதுரை ஆனையூரில் உள்ள கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது இதில் 17 வது, 18 வது வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர் மக்களால் கொடுக்கப்பட்ட மனுக்களில் சில மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது மற்ற மனுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவான உடனடி தீர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்நிகழ்சியில் மதிப்பிற்குரிய மண்டலம் 1 தலைவர் திருமதி வாசுகி சசிகுமார் அவர்களும் உதவி ஆணையாளர் அவர்களும் உதவி செயற்பொறியாளர் அவர்களும் வார்டு 18 மாமன்ற உறுப்பினர் திரு நவநீதகிருஷ்ணன் அவர்களும் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்
