பயிற்சி முடித்த இரண்டாம் நிலை காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கி பாராட்டிய மதுரை மாநகர காவல் ஆணையர்
கடந்த 5ம் தேதி ( 05-01-24) தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலருக்கான அடிப்படை கவாத்து மற்றும் சட்டப் பயிற்சி வகுப்புகள் மதுரை மாவட்டம் இடையபட்டியில் உள்ள நிரந்தர காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 6 மாதங்கள் நடைபெற்று வந்தது மேற்கண்ட அடிப்படை பயிற்சியில் .436 காவலர்கள் பயிற்சி முடித்து மேலும் 1 மாதம் செயல்முறை பயிற்சிக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பபடவுள்ளனர். இந்நிலையில் பயிற்சி நிறைவு விழாவில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. Dr. J.லோகநாதன் IPS., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி காவலர்களின் கவாத்து அணிவகுப்பிணை பார்வையிட்டும் அடிப்படை பயிற்சியில் கவாத்து மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி விழாவினை சிறப்பித்தார்கள் இவ்விழாவில் மேற்படி காவலர் பயிற்சி பள்ளியின் முதல்வர் திருமதி. ராஜேஸ்வரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வரவேற்புரையாற்றினார். துணை முதல்வர் திரு.அய்யர்சாமி வரவேற்புரையாற்றினார். காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்