மதுரை திருப்பரங்குன்றத்தில்
6அடிநீளமுள்ள
மலைப்பாம்பு மீட்பு
மதுரை திருப்பரங்குன்றம் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் ஆறு அடி நீளம் முள்ள
மலைப்பாம்பை பத்திரமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
திருப்பரங்குன்றம் பூங்கா பேருந்து நிறுத்தம் அருகே பூக்கடைகள் அதிகம் உள்ள பகுதியான அப்பகுதியில் மலை பாம்பு ஒன்று இருப்பதாக திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயக்குமார் தலைமையிலான தீனைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் பாம்பு பிடி வீரரான ஸ்நேக் பாபு
அவர்களுடன் இணைந்து பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இப்போது சுமார் அரை மணி நேரம் தேடுதலுக்குபின்6அடி
நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சிக்கியது மக்கள் அதிகம் உள்ள பகுதியில் மலைப்பாம்பு கொண்டு சிக்கியது.
அதை பத்திரமாக மீட்டு வனத்துறை அதிகாரி விஜயராஜன் பத்திரமாக ஒப்படைத்தனர். பின் அடர்ந்த வனப்பகுதியில் காலையில் கொண்டு விடப்படும் என வனத்துறை அதிகாரி விஜயராஜன் தெரிவித்தார். அதிகம் குடியிருப்பு மற்றும் போக்குவரத்து உள்ள பகுதியில் மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.