
மனு கொடுத்து பெற்ற ஒப்புகை சீட்டை தலையில் சுமந்து வந்த முதியவர்- கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் மனு அளித்தனர்.
இந்த நிலையில் முதியவர் ஒருவர் தலையில் பேப்பர் கட்டை வைத்துக்கொண்டு மனு அளிக்க நேரில் வந்தார். இவர் திட்டக்குடி வடகரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி (வயது 70). இவருக்கு அதே பகுதியில் நிலம் உள்ளது.
இந்த நிலத்திற்கான பட்டாவை மாற்ற மனு கொடுத்தும், மாற்றம் செய்யாமல் பல ஆண்டுகளாக அலைகழித்து வருகின்றனர். இது தொடர்பாக 67 முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 67 முறை மனு அளித்ததற்கான ஒப்புகை சீட்டுகளை கட்டி அதனை தலையில் சுமந்து கலெக்டரிடம் மனு கொடுக்க வந்ததாக அவர் கூறினார்
