திண்டுக்கல் அருகே அந்தியோதயா ரயிலை கவிழ்க்க சதி? ரயில்வே போலீசார் விசாரணை
அந்தியோதயா ரயில் நேற்று திண்டுக்கல் ரயில்வே ஸ்டேசனுக்கு இரவு 8.40 மணிக்கு வந்து 8.45 மணிக்கு புறப்பட்டது அம்பாதுறை கொடைரோடு காமலாபுரம் அருகே இரவு 9 மணிக்கு ரயில் வந்தது. அப்போது ரயில் தண்டவாளத்தில் கற்கள் இருந்ததை ரயில் ஓட்டுனர் பார்த்தார்.
ரயிலை நிறுத்தி உதவியாளரோடு கீழே இறங்கி கற்களை அகற்றி மீண்டும் ரயிலை இயக்கினார் இதனால் பெரும் விபத்து தவிற்க்கப்பட்டது. இது தொடர்பாக ரயில் ஓட்டுனர் திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமாருக்கு தகவல் கொடுத்தார் இன்ஸ்பெக்டர் சுனில்குமார் அவர்களின் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
ரயிலை கவிழ்க ஏதாவது சதி நடந்துள்ளதா என விசாரித்து வருகின்றனர்.