Police Department News

பொதுமக்களுக்கு தமிழ்நாடு காவல்துறை நன்மையை மட்டும் செய்யும் போக்குவரத்து காவலர்கள்

இன்று காலை 11.00 மணியளவில் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை உதவிஆய்வாளர் திரு.கனகராஜ் அவர்கள் மற்றும் அவருடன் பணியில் இருந்த ஏ.த பாலன் அவர்களும் பள்ளிகரணை காமாட்சி மருத்துவமனை அருகில் வாகனசோதனையின்போது வாகனஓட்டிகளிடம் கொரோன விழிப்புணர்வு பற்றியும் மாஸ்க் மற்றும் அடையாள அட்டை இருக்கிறதா என்றும் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகளிடமும் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் மரியாதை நிமித்தமாக விசாரித்து தங்கள் பணியை மிகவும் சரியாக செய்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி தண்ணீர் மற்றும் மோர் போன்ற பானங்களை தாகம் என்று கேட்பவர்களுக்கு கொடுக்கின்றனர். வாகன ஓட்டிகள் சிலரிடம் கேட்டபோது போக்குவரத்து காவல்துறையினர் மரியாதையாக நடத்துகின்றனர் என்று கூறுகின்றனர். இவை அனைத்தும் மரியாதைக்குரிய D.G.P திரிபாதி,IPS அவர்கள் மற்றும் சென்னை கமஷ்னர் மரியாதைக்குரிய விஸ்வநாதன் அவர்கள் ஆணைப்படி சிறப்பாக நடக்கிறது என்று பொதுமக்களே கூறகின்றனர்.இப்படிபட்ட நன்மையான பணிகளை போக்குவரத்து காவல்துறை உதவிஆய்வாளர் திரு.கனகராஜ் மடிப்பாக்கம். அவர்கள் சிறப்பாக பணியை செய்து வருகின்றனர்.

T.பிரபு
போலீஸ் இ நியூஸ் தென்சென்னை மாவட்ட நிருபர்

Leave a Reply

Your email address will not be published.