மதுரையில் 38 ஆட்டோக்கள் பறிமுதல்
மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. J. லோகநாதன் அவர்களின் உத்தரவின்படி விதிகளை மீறி இயங்கும் ஆட்டோக்கள் தொடர்பாக போக்குவரத்து காவல் துறையினர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் 10 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
போக்வரத்து விதிமுறைகளை மீறும் குற்றங்களில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோகளில் மீட்டர் பொருத்தாதது அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்கள் தொடர்பாக 613 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
அபராதம் ரூபாய் 4 லட்சத்து 21 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. 38 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவைகளை சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டன என போலீசார் தெரிவித்தனர்.