
மதுரை தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் இட மாற்றம்
மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் பைபாஸ் ரோட்டில் நெரிசலான பகுதியில் இயங்கி வந்தது மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் வாடகை செலுத்தி இயங்கும் இந்த அலுவலகத்திற்கு நாகமலை புதுக்கோட்டையருகே மேலகுயில்குடி கிராமத்தில் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது இவ்வலுவலகம் கடந்த மார்ச் 4 ல் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்டது
இது தவிர மேலூர் சூரகுண்டு அருகே முனியாண்டிபட்டியில் வாகன ஆய்வாளர் அலுவலகமும் (யூனிட் அலுவலகம்) அதே நாளில் திறக்கப்பட்டது இந்த இரண்டு அலுவலகங்களும் இன்று மார்ச் 7 ம் தேதி முதல் புதிய கட்டிடத்தில் இருந்து செயல்பட துவங்கும்
எனவே இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் போக்குவரத்து தொடர்பான பணிகளுக்கு இன்று முதல் இந்த அலுவலகங்களையே தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
