
பென்னாகரம் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நற்செயலை பாராட்டிய காவல்துறையினர்….
இன்று 8.3.2024-ம் தேதி 13.00 மணிக்கு பென்னாகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் திருமலை , தனுஷ் இருவரும் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும்போது காந்திநகர் என்ற இடத்தில் செல்போன், பணம் கிடைத்தது என்று பென்னாகரம் காவல் நிலையம் வந்து காவல் ஆய்வாளர் அவர்களிடம் செல்போன் ,பணத்தை ஒப்படைத்தனர். அவர்களின் நற்செயலை பாராட்டி பென்னாகரம் காவல் ஆய்வாளர் Tr.S.முத்தமிழ்செல்வன் ,காவல் உதவி ஆய்வாளர் Tr.S.கருணாநிதி , பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், காவலர்கள் முன்னிலையில் அவர்கள்இருவருக்கும் பரிசு மற்றும் பாராட்டுகள் வழங்கப்பட்டது மேலும் அந்த செல்போன், பணத்தை உரிய நபரை கண்டுபிடித்து (ராஜா மகன் விக்னேஷ், காந்திநகர்) என்பவரிடம் காவல் ஆய்வாளர் அவர்களால் நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டது ….
போலீஸ் இ செய்திகளுக்காக…
பென்னாகரம் செய்தியாளர் :
டாக்டர்.மு. ரஞ்சித் குமார்.
அரவிந்த்
