
ரயில்களில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த 2618 பேர் கைது 15,45,165 ரூபாய் அபராதம்
பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது ரயில் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலரின் கவனத்தை ஈர்ப்பதற்காக ரயில்களில் அபாய சங்கிலிகள் வழங்கப்பட்டுள்ளன இந்த அபாய சங்கிலியை தவறாக பயன்படுத்துவதால்
ரயில்களின் இயக்க நேரம் பாதிக்கப்படுகிறது இந்த விதி மீறல்களுக்கு ரயில்வே சட்டத்தின் படி தண்டனை அதிகபட்சம் ஒரு ஆண்டு சிறைத் தண்டனையோ அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்
நடப்பு நிதியாண்டில் இதுவரை தெற்கு ரயில்வேயில் அபாய சங்கிலி இழுத்தல் தொடர்பாக 2632 வழக்குகள் பதிவாகியுள்ளன இதில் 2618 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்களிடமிருந்து 15 லட்சத்து 45 ஆயிரத்து 165 ரூபாய் அபதாரம் வசூலிக்கப்பட்டுள்ளது இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
