

பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி உட்கோட்ட பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு
தேனி மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்.இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் ஆண்டிபட்டி உட்கோட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.N.சண்முகசுந்தரம் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.
