
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள ஆலடி காவல் நிலைத்தில் திரு.ராதாகிருஷ்ணன் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் 14.12.2019 ஆம் தேதி ஒரு ரோந்து பணி செல்லும் போது பள்ளி மாணவர்கள் அனைவரும் வார இறுதியில் வண்ண உடைகளை அணிந்து சென்றுள்ளனர் ஆனால் ஒரு மாணவன் மட்டும் சீருடையில் சென்றுள்ளார். அவரை விசாரித்தபோது தனக்கு இரண்டு சீருடைகள் மட்டுமே உள்ளது என்று தமது ஏழ்மையை குறிப்பிட்டுள்ளார் இதனை அறிந்த உதவி ஆய்வாளர் அவருக்கு இரண்டு ஜோடி புத்தாடைகளை பரிசளித்தார்.