
மதுரையில் கஞ்சா விற்றவர்கள் கைது
மதுரை மாட்டுத்தாவணி போலீசாருக்கு மீன் மார்க்கெட் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்த போது வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் சக்கிமங்கலம் கிழக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி வயது(24) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் வெளிப்பகுதியில் கஞ்சா விற்ற பி. பி.குளம் காமராஜர் தெருவை சேர்ந்த செல்வராஜ் வயது (25) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
