திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர்
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. தெய்வம் அவர்களின் வழிகாட்டுதல் படி இன்று (27.03.2024) திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.குணசுந்தரி அவர்கள் மற்றும் காவலர்கள் சார்பில் செம்பட்டி காமுபிள்ளைசத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் சைபர் குற்றங்கள் குறித்தும், அவற்றை கையாளும் முறைகள் குறித்தும் மேலும் சைபர் கிரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும் படியும், இணையதளம் வழியாக புகார் செய்ய www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தும் படியும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் குழந்தைகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.