
அத்திமாஞ்சேரிப்பேட்டையில் தொடரும் பைக் திருட்டு: பொதுமக்கள் அச்சம்
பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரிப்பேட்டை கிராமத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பள்ளிப்பட்டு – சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அத்திமாஞ்சேரிப்பேட்டை, பொதட்டூர்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியாக உள்ளது.
அத்திமாஞ்சேரிப்பேட்டை கிராமத்தில், பாதுகாப்பு உறுதிப்படுத்து வகையில் ஊராட்சி மன்றம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், அத்திமாஞ்சேரிப்பேட்டை கிராமம் உள்ளிட்ட பகுதிகளான பேருந்து நிலையம், அரசு அலுவலகங்கள், வீடுகளின் முன்பு நிறுத்தப்படும் இருச்சக்கர வாகனங்கள் கடந்த சில காலமாக திருடுபோவதாக பாதிக்கப்பட்டவர்களும், அப்பகுதி மக்களும் காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.
