திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.
30.03.2024
தமிழக காவல்துறையில் 36 வருடங்கள் அமைச்சுப் பணியாளராக இருந்து சிறப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் அம்பாசமுத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. செல்லபாண்டியன் அவர்கள் மற்றும் 20 வருடங்கள் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெறும் கூடங்குளம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. ஆரோக்கிய ஜேம்ஸ் அவர்கள் மற்றும் 15 வருடங்கள் ராதாபுரம் காவல் நிலையத்தில் துப்புரவு பணியாளராக இருந்து ஓய்வு பெறும் திருமதி. வெள்ளையம்மாள் அவர்கள் ஆகிய மூவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சிறப்பான முறையில் பணியாற்றியதை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்கள் பொன்னாடை அணிவித்தும், பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.