



காரியாபட்டி காவல் நிலையத்தில் புதியதாக துவங்கப்பட்டுள்ள பாய்ஸ் கிளப் (சிறுவர் & சிறுமியர்) அரங்கம்
சிறுவர் சிறுமியர் அரங்கத்திற்கு வரும் காவல் நிலையம் பின்புறம் உள்ள ஜெகஜீவன்ராம்தெருவில் அம்பேத்கர் மாலை நேர கல்வி மையத்தில் பயிலும் சிறுவர், சிறுமியர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில் காரியாபட்டி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சின்னக்கருப்பன், காரியாபட்டி வட்ட காவல் ஆய்வாளர் செந்தில்குமார், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் சொக்கப்பன், சுப்பிரமணியன், தலைமை காவலர் சிவபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த முயற்சியை எடுத்த காரியாபட்டி வட்ட காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காரியாபட்டி சார்பு ஆய்வாளர் அசோக்குமார் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
