

உசிலம்பட்டி அருகே கிணற்றில் குளிக்க சென்றவர்கள் நீரில் மூழ்கி பலி
உசிலம்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்றவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருகட்டான் பகுதியைச் சேர்ந்த கணேசன் ஆனந்த் என்ற பாண்டி (38) மற்றும் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் 22 ஆகிய இருவரும் உறவினர்கள் இவர்கள் சீமானூத்து கிராமத்தில் அன்னக்கொடி என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றவர்கள் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் தோட்டத்துப் பகுதியில் உள்ள கிணற்றில் தேடி பார்த்து பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் நீண்ட நேரம் போராடி இருவரையும் சடலமாக மீட்டனர்.பின்னர் அவர்களது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
