

மதுரை, செல்லூர் பகுதியில் பணம் பறிப்பு மற்றும் தவரான உறவுக்கு அழைத்து வரமறுத்த கொத்தனார் கொலை, செல்லூர் போலீசார் துரித நடவடிக்கையால் குற்றவாளி கைது
மதுரை, செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தத்தனெரி, பாக்கியநாதபுரம், அசோக்நகரில் வசித்து வரும் தம்பதியர் மாரியப்பன் வயது 39/21, மீனா வயது 32/21, இவர்களுக்கு இரண்டு மகள்கள் பெயர் முத்துலெட்சுமி வயது 13/21, சுதா வயது 11/21, மாரியப்பன் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
இவர் தினசரி காலை 7 மணிக்கு வேலைக்கு சென்று மாலை 6 மணி வேலை முடித்து, அதன் பிறகு கீழே கிடக்கும் பழைய பிளாஸ்டிக்களை பொருக்கி எடுத்து கடைகளில் அதை போட்டு காசு வாங்கிக் கொண்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வருவது வழக்கம். இந்த நிலையில்
கடந்த ஒரு வார காலமாக இவருடன் கொத்தனார் வேலை செய்து வரும் சையது சேக் முகமது என்பவர் இவரை மிரட்டி பணம் பறிப்பதும் தண்ணீயடிக்க அழைப்பதும், மற்றும் தவரான உறவுக்கு அழைத்தும் தொந்தரவு செய்து வந்தார். இந்த விபரத்தை தனது மனைவியிடம் கூறி வந்துள்ளார், இருந்த போதிலும் குடும்பத்தில் உள்ள வறுமையான சூழ்நிலை காரணமாக பயத்துடன் வேலைக்கு சென்று வந்துள்ளார், இந்த நிலையில் கடந்த 23 ம் தேதி காலை 6 மணிக்கு வேலைக்கு சென்றவர், இரவு 10 மணி வரை திரும்பி வரவில்லை அவரிடம் அலை பேசி இல்லா காரணத்தால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை, நைட் வேலை இருந்தால் அவரே போன் செய்து சொல்லுவார், ஆனால் 24 ம் தேதி காலை 4 மணிவரை எந்த தகவலும் இல்லாத காரணத்தால் அவரை மனைவி தன் மச்சான் மற்றும் கொழுந்தன் ஆகியோருடன் சேர்ந்து தேட ஆரம்பித்தார், இந்த நிலையில் மதுரை குலமங்கலம் ரோடு, பகவத்சிங் தெரு, ஆகாஷ் விண்டோஸ் கடைக்கு பக்கத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்று பார்த்போது மாரியப்பன் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார், உடனே அவரது மனைவி மீனா செல்லூர் D2, காவல்நிலையத்தில் புகார் செய்தார், புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திரு மாடசாமி அவர்கள் துரிதமாக விசாரணையை தொடங்கினார், மாரியப்பனை அடிக்கடி வேலைக்கு கூட்டிச் செல்லும் எலி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த வேல்முருகன் என்பவரிடம் விசாரித்தபோது 23 ம் தேதி இரவு 9 மணியளவில் மாரியப்பனுடன் வேலை செய்யும் சையது சேக் முகமது மாரியப்பனுடன் ஏதோ வாய் தகராறு செய்து வந்ததாகவும் அதன் அவர் தன் வீட்டிற்கு வந்து விட்டதாகவும் கூறியுள்ளார். அதன்பின் சையது சேக் முகமதுவை பிடித்து விசாரித்த போது அவர் மாரியப்பனிடம் பணம் கேட்டும், தகாத உறவுக்கு அழைத்தும் தொந்தரவு செய்துள்ளார் அதற்கு மாரியப்பன் மறுப்பு தெரிவிக்கவே, கோபமடைந்த சையது சேக் முகமது மாரியப்பனை கட்டையால் அடித்து கொலை செய்து விட்டு தப்பி விட்டது தெரிய வந்தது. உடனே அவரை கைது செய்து நீதிமன்றத்தில்
ஒப்படைத்து, நீதிபதியின் உத்தரவின்படி அவரை சிறையில் அடைத்தனர்.
