
புகையிலை விற்றவர் மீது வழக்கு
பேரையூர் பகுதியில் டி.கல்லுப்பட்டி வட்டார உணவு கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரி கோவிந்தன் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேரையூர் அரண்மனை வீதியில் உள்ள முருகன் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பேரையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் முருகன் உள்ளிட்ட இருவர் மீதும் பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
