மதுரையில் வக்கீலை தாக்கியவர் கைது
மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாசம் வயது 56 உயர் நீதிமன்ற வழக்கறிஞரான இவர் நேற்று முன்தினம் ஜவகர்புரம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டில் அருகே வசிக்கும் முனீஸ்வரன் வயது (32) என்பவர் அவரது வீட்டில் வளர்க்கும் நாய் அடிக்கடி கூச்சலிடுவதை தடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பிரகாசத்தை தாக்கிய முனீஸ்வரன் அவரது செல்போன் மற்றும் இரண்டு சவரன் தங்கச் செயினை பறித்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த K. புதூர் போலீசார் முனீஸ்வரனை கைது செய்தனர்.