
ரூ.20 லட்சம் மோசடி செய்த தொழிலதிபர் மீது வழக்கு
மதுரை k. புதூர் லூர்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் பாபு இவர் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது.. நான் கே,கே நகரில் ஜிம் நடத்தி வருகிறேன் 2014 ஆம் ஆண்டு ஆலாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஐசக் அப்பாஸ் என்பவர் அறிமுகமானார் அவர் புரோட்டின் பவுடர் விற்பனை செய்வதாக கூறினார்.அந்த தொழில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக் கூறியதால் 2016 ஆம் ஆண்டு முதல் பல தவணைகளாக வங்கி கணக்குகளிலும் நேரடியாகவும் ரூபாய் 57. 52 லட்சத்தை அவரிடம் வழங்கினேன். பணம் கொடுத்த பிறகுதான் அவர் புரோட்டின் பவுடர் விற்பனை செய்யும் தொழில் செய்யவில்லை என தெரிய வந்தது. இதனால் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டபோது ஐசக் கொடுக்க மறுத்ததால் ஏற்கனவே புகார் அளித்தேன். அப்போது ரூபாய் 18 லட்சத்தை திருப்பிக் கொடுத்தார். பிறகு ரூபாய் 20 லட்சத்திற்கான காசோலை கொடுத்தார். ஆனால் காசோலைக்கான வங்கி கணக்கு முடிக்கப்பட்டிருந்தது. எனவே என்னை ஏமாற்றிய ஐசக் அப்பாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். புகார் தொடர்பாக மதுரை மத்திய குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
