
ஆயுதங்களுடன் 3 பேர் கைது
மதுரை எஸ்,எஸ், காலனி போலீசார் ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் பெரிய வாள் இருந்தது தெரிய வந்தது. ஆட்டோவில் வந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் வயது (33) என்பதும் குற்ற செயல்களில் ஈடுபடுவதற்காக ஆயுதத்தைக் கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதால் அவரை போலீசார் கைது செய்தனர். இதுபோல் எல்லீஸ் நகர் பாலத்தின் கீழ் பகுதியில் வாள் கத்தி போன்ற ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
