தீ விபத்து மற்றும் மீட்பு பணிகளில் வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
2024 ஏப்ரல் 14 அன்று காலை 08.00 மணிக்கு நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. காவல்துறை தலைமை இயக்குநர் / இயக்குநர் – தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை திரு.அபாஷ் குமார் இ.கா.ப, தீவிபத்து மற்றும் மீட்புப் பணிகளில் வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் திருமதி.மீனாட்சி விஐயகுமார் இணை இயக்குநர் வடமண்டலம், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.