திண்டுக்கல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணி புரியும் காவலர்கள் மற்றும் ஊர் காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர்,தபால் வாக்குப்பதிவு செய்யும் மையங்கள்
நாடாளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணி புரியும் காவல்துறையினர், ஊர் காவல்படையினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் இதர அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்யும் மையங்கள் அமைக்கப்பட்டன.
இன்று (16.04.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தபால் வாக்கு மையத்தை பார்வையிட்டு தனது தபால் வாக்கினை பதிவு செய்தார்கள்.