
வாளுடன் பதுங்கி இருந்த வாலிபர் கைது
மதுரை ஜெய்ஹிந்த் புரம் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் அன்புதாசன் மற்றும் போலீசார் சோலை அழகுபுரம் சித்தி விநாயகர் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போலீசாரை கண்டு தப்பியோட முயன்ற வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் பெரிய வாள் ஒன்று இருந்தது தெரியவந்தது.மேலும் அவரிடம் விசாரித்ததில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் வயது (24) என்பதும் கடந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் நண்பரை கொலை செய்தவர்களை பழிக்குப் பழி வாங்க வாலுடன் சுற்றியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து வாளை பறிமுதல் செய்தனர்.
