
மதுரையில் 187 மது பாட்டில்கள் பறிமுதல்; 31 பேர் கைது
மதுரை ஜெய்ஹிந்துபுரம், திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், எஸ்.எஸ்.காலனி உள்பட பல்வேறு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்தந்த பகுதிகளில் திடீர் சோதனை ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த 31 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 187 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மார்க்கெட் பகுதியில் ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக தல்லாகுளம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தார். அப்போது ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்ற செல்லூர் மீனாட்சிபுரம் ஜீவா நகரை சேர்ந்த காமராஜை(57) கைது செய்தார். அவரிடம் இருந்து செல்போன் மற்றும் லாட்டரி சீட்டு விற்ற பணம் ரூ.4 ஆயிரத்து 169-ம் பறிமுதல் செய்யப்பட்டது.
