தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் சென்னை காவல் ஆணையரை சந்தித்து பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் தனது புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் டி.பி.யாக வைத்து சக அதிகாரிகளிடம் பணம் வசூலிக்கிறார்கள் என்று சிலர் மீது குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை குறிவைத்து பல்வேறு சமூக ஊடக தளங்களில் போலி ஐடிக்கள் உருவாக்கப்படுகிறது. அந்த ஐடிக்கள் மூலம் அவர்களின் உறவினர்கள் மற்றும் உடன் பணியாற்றுவோர்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது. அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்று கூறி பணத்தை பறிக்கும் மோசடி கும்பல்கள் அதிகரித்துள்ளன..
இது தொடர்பாக அண்மையில் எழுந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் தொடர்புடையவர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.