
கஞ்சா போதையில் கார் ஓட்டிய இளைஞர் விபத்து
மதுரையைச் சேர்ந்த சிவராஜ் கஞ்சா மற்றும் போதையில் அதிவேகமாக காரை ஓட்டி சென்று இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மீது மோதி உள்ளார், மேலும் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மீதும் மோதிவிட்டு, அதன் பின்பு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த அரசு பேருந்து மீதும் மோதியதில் நிலை தடுமாறி கார் நகராட்சி அலுவலகம் முன்பு இருந்த தேவர் சிலை பீடத்தில் மோதியது. இதில் காரில் இருந்த பலூன் திறந்ததால் சிவராஜ் உயிர் தப்பினார். இது குறித்து காரைக்குடி டி.எஸ்.பி .பிரகாஷ் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
