
கொடைக்கானலில் வீட்டுக்குள் புகுந்த கருஞ்சாரைப்பாம்பு
கொடைக்கானல் நகரில் உள்ள கல்லுக்குழி பகுதிக்கு செல்லும் வழியில் ஜெயச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டிற்குள் பாம்பு புகுந்து விட்டதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து அங்கு விரைந்த அவர்கள் வீட்டிற்குள் பதுங்கி இருந்த சுமார் 7 அடி நீளம் உள்ள கருஞ்சாரைப் பாம்பினை 1 மணி நேரம் போராடி பிடித்தனர். பின்னர் அந்தப் பாம்பை வனத்துறை ஊழி யர்களிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் அதை அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர். பாம்பு பிடிப்பதை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
