
பள்ளி வாகனங்களில் அதிரடி சோதனை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி பேருந்து மற்றும் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ மாணவியர்களை ஏற்றுச் செல்லும் பேருந்துகள் மற்றும் பயன்கள் என 32 வாகனங்களில் நேற்று உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு. ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் சிவானந்தம்; மற்றும் உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக தீ மற்றும் விபத்து ஏற்பட்டால் மாணவ, மாணவிகள் பாதுகாப்பு குறித்தும் மாணவ மாணவிகள் ஏறும் போதும் இறங்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமீறல்கள் குறித்து உசிலம்பட்டி தீயணைப்பு துறை என்றால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி வாகனங்களில் நிலையான இருக்கைகள் ;கேமரா; ஓட்டுநர்,உதவியாளர், ஆவணங்கள் குறித்து சரிபார்க்கப்பட்டு மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அளவில் பள்ளி வாகனங்கள் உள்ளனவா? என ஒவ்வொரு வானத்திலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
