மதுரை, மேலூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை இருவர் கைது
மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சுதன் அவர்கள், நிலைய காவலர்களுடன் ஆய்வாளர் திரு சார்லஸ் அவர்களின் அனுமதி பெற்று சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது நாயத்தான்பட்டி, முத்துச்சாமிபட்டி ஆகிய இடங்களில் சட்டத்திற்கு விரோதமாக மது விற்றுக்கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் நயத்தான்பட்டியை சேர்ந்த முத்தையா மகன் செல்லமுத்து வயது 58, மற்றும் முத்துச்சாமிபட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பொன்முத்து என தெரிய வந்தது, உடனே அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்
