




திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மகாலில் காவலர்களுக்கு குடும்ப நல மகிழ்ச்சி என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப்.இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி காவல் துறையினருக்கு காவலர் குடும்ப நல மையம் சார்பாக மகிழ்ச்சி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.வினோஜி அவர்கள், காவலர் குடும்ப நல மையம் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் டாக்டர்.சரவணகுமார் (உளவியல் நிபுணர்) அவர்கள், மதுரை MS செல்லமுத்து அறக்கட்டளை தென் மண்டல உளவியல் நிபுணர் திரு.R.பிரசன்னா ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் காவலர்களுக்கு மன அழுத்த பயிற்சி குறித்தும், குடும்ப நல ஆலோசனைகள் குறித்தும், ஆலோசனைகளை பெற 7305033041 என்ற என்னை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தினார்கள்.
