
மதிச்சியம் காவல்நிலைய போலீசாருக்கு மதுரை மாநகர் காவல் ஆணையர் பாராட்டு
எல்லைக்கு உட்பட்ட ஹோட்டலில் தங்கி இருந்த நபர்களிடம் திருடப்பட்ட மூன்று பவுன் தங்கச் செயின், வெள்ளி பொருட்கள், லேப்டாப், வாட்ச் போன்றவற்றை திருடிய நபரை 30 நிமிடங்களில் பிடித்து அவரிடம் இருந்த திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து உரியவரிடம் ஒப்படைத்த மதிச்சியம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ராஜகோபால் மற்றும் தலைமை காவலர் 3676 திரு.ராமச்சந்திரன் ஆகியோரை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் IPS .,அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை கூறி பண வெகுமதியும் பாராட்டு சான்றிதழும் வழங்கி கௌரவித்தார்.
