மதுரை, தெற்கு வாசல் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், பறிமுதல், மூவர் கைது.காவல் ஆய்வாளரின் அதிரடி நடவடிக்கை
மதுரை, சின்னக்கடைப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் ஒன்று மதுரை, தெற்கு வாசல் B5 காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அனுராதா அவர்களுக்கு கிடைத்ததை தொடர்ந்து , அங்கு சென்று சோதனை செய்ய கனம் நீதித் துறை நடுவர் எண்.iv, மதுரை அவர்களுக்கு சோதனை முன் அனுமதிகடிதம் அனுப்பி, அவரின் அனுமதி பெற்று 09/12/2020 அன்று இரவு சுமார் 10.15 மணியளவில் மதுரை டவுன், சின்னக்கடை வீதி, எழுத்தாணிக்கார தெருவில் ஒரு குடோனில் தன் போலீஸ் பார்டியுடன் சென்று சோதனை செய்ததில் அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மனித உடலுக்கும் உயிருக்கும் ஊறுவிளைவிக்ககூடிய புற்றுநோய் போன்ற கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய புகையிலை பொருட்களை சில்லரை விற்பனைக்காக வைத்திருப்பது தெரிய வந்தது.
சில்லரை விற்பனைக்காக அவைகளை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த கனேஷ்மல் ஜெயின் மகன் அசோக்குமார் ஜெயின் வயது 50/2020, வில்லாபுரம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் முத்துப்பாண்டி வயது 53/2020, அதே பகுதியை சேர்ந்த வரதராஜன் மகன் சாய்ராம் வயது 57/2020, ஆகியோர் தங்களின் குற்றத்தை ஒப்பு கொண்டதின் பேரில் அவர்களை கைது செய்து, சட்ட விரோதமான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து அவர்கள் மூவரின் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி நீதி மன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
