
டாக்டரிடம் ரூ. 20 லட்சம் மோசடி
மதுரை கிருஷ்ணராயர் தெப்பக்குளத்தை சேர்ந்தவர் ராஜகோபால் வயது (79) குழந்தைகள் நல டாக்டர் இவரது மருத்துவமனைக்கு தேனி ரோட்டை சேர்ந்த சங்கர் மனோகரன் 10 ஆண்டுகளாக மருந்துகள் சப்ளை செய்தார். டாக்டரிடம் வியாபாரத்தை பெருக்கவும் குடும்ப செலவுக்காக ரூபாய் 20 லட்சம் கடன் பெற்றார். ஓராண்டுக்கும் மேலாக கடனை திருப்பித் தரவில்லை. அந்த தொகைக்காக டாக்டரிடம் காசோலை வழங்கினார். அதுவும் வங்கியில் பணம் இன்றி திரும்பியது. இதுகுறித்து கேட்ட டாக்டரை ஆபாசமாக பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். திலகர் திடல் போலீசார் சங்கர் மனோகரன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
