போக்குவரத்து விதி முறைகளை கடைபிடிப்போருக்கு மரக்கன்று வழங்கி வாழத்திய காவல் துறையினர்
அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தலைகவசம் அணிந்து வருபவர்களுக்கு மரக்கன்று மற்றும் இனிப்பு வழங்கி பாராட்டினர். மேலும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து காவலர்கள் தலைகவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்
காவல் துறையினரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
