புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு
மதுரை மத்திய சிறையில் காவலர்களுக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த சட்ட விளக்க பயிற்சி வகுப்பு துவக்க விழா இந்தியா முழுவதும் புதிய முப்பெரும் சட்டங்கள் 1 .7 .2024. முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் மதுரை மத்திய சிறை சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு இந்த புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கும் விதமாக சட்ட விளக்கப் பயிற்சி வகுப்பு இன்று மதுரை மத்திய சிறையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மதுரை சரக சிறைத்துறை டி .ஐ .ஜி திரு, பழனிஅவர்கள் தலைமையில் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு. சதீஷ்குமார் அவர்கள் முன்னிலையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சாமிதுரை மற்றும் சிவக்குமார் சட்ட உதவி வழக்கறிஞர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சாமி சந்திரசேகரன் சட்ட ஆலோசகர் சிவகங்கை மாவட்ட காவல்துறை ஆகியோர் இணைந்து சிறைப்பணியாளர்களுக்கு மூன்றநாள்*** *1) பாரதிய நீதி சட்டம் 2023; 2) பாரதிய சாட்சியச்சட்டம், 2023;(3) பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் 2023; குறித்த சட்டப் பயிற்சி அளிக்க உள்ளனர். இப்பயிற்சியில் சுமார் 300 சிறைப் பணியாளர்கள் கலந்து கொண்டு சட்டப் பயிற்சி பெற உள்ளனர்.