
இரு வேறு வீடுகளில் 10 பவுன் தங்க நகை திருட்டு
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் இரு வேறு வீடுகளில் 10 பவுன் தங்க நகை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை ராம்கோ நகரை சேர்ந்த கவர்தீன் மகன் முகமது ஹீசைன்47/24 என்பவர் மதுரையில் உள்ள மருத்துவ ஆய்வக நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சுற்றுலாவுக்கு சென்று விட்டு நேற்று முன் தினம் வீடு திரும்பினார்..அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டுஇருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீரவிலிருந்த ஆறு பவுன் தங்க நகை திருட்டுப் போனது தெரிந்தது.இதுபோல அதே பகுதியில் சேர்ந்த நாகராஜன் மகன் வையாபுரியின் 43/24 என்பவரின் வீட்டிலும் நகை திருடப்பட்டது.இவர் காளவாசல் பகுதியில் உள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தஞ்சாவூர் சென்று விட்டு நேற்று முன் தினம் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நான்கு பவன் நகை திருட்டுப் போனது தெரிந்தது.இந்த 2 திருட்டு சம்பவங்களும் குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகினர்.
