Police Recruitment

மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு தனி காவல் நிலையம்

மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு தனி காவல் நிலையம்

முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது இக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசம், தெப்பத் திருவிழா, பங்குனி தேரோட்டம், வைகாசி விசாகம், ஆணி ஊஞ்சல் திருவிழா, சஷ்டி, கார்த்திகை உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடக்கிறது. மாதந்தோறும் பௌர்ணமி நாளன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் பாதுகாப்பு பணிகள் காரணமாக கோயில் வளாகத்தில் தனியாக காவல் நிலையம் அமைக்க அறங்காவலர் குழு கோரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தினை இரண்டாகப் பிரித்து கோவிலுக்கு தனி காவல் நிலையம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. இதனை பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.