ஏழு இடங்களில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க பேரவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தகவல்
தமிழகத்தில் இந்த ஆண்டு 7 இடங்களில் புதிதாக தீயணைப்பு நிலையங்கள் நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், செங்கல்பட்டு மாவட்டம் கோவளம், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை, திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி மாநகரம், சிவகங்கை மாவட்டம் புதுவயல் ஆகிய ஏழு இடங்களில் புதிய தியணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்கள் நிறுவப்படும். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக 50 புதிய நீர் தாங்கி வண்டிகள் மொத்தம் ரூபாய் 37. 50 கோடியில் வழங்கப்படும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் பயன்பாட்டிற்காக புதிதாக மூன்று நுரை தகர்வு நீர் தாங்கி ஊர்திகள் ரூபாய் 2. 40 கோடியில் வழங்கப்படும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் பயன்பாட்டிற்கு புதியதாக ஐந்து அவசரகால மீட்பு ஊர்திகள் ரூபாய் 5.50 கோடியில் வழங்கப்படும். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் உதவி மாவட்ட அலுவலர்களின் அலுவலக பயன்பாட்டிற்காக புதிதாக 10 ஜீப்புகள் வழங்கப்படும் வெள்ளம் மற்றும் பேரிடர் மீட்பு பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையின் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் இவ்வாறு கூறியுள்ளார்.