ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் முதன் முறையாக திருநங்கை தேர்ந்தெடுக்கப்பட்ட பணி நியமன ஆணை வழங்கிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (11.07.2024) ஊர்க்காவல்படைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 23 நபர்களுக்கு பணி நியமன ஆணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ், இ.கா.ப., அவர்களால் வழங்கப்பட்டது. மேலும் மேற்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர் காவல்படை வீரர்களில் திருநங்கை ஒருவருக்கு மாவட்டத்தில் முதன்முறையாக ஊர்க்காவல் படைக்காண பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.