காரியாபட்டி காவல் நிலையத்திற்கு காவல்துறை கூடுதல் இயக்குனர் திடீர் விஜயம்
காரியாபட்டி காவல் நிலையத்திற்கு திடீர் விஜயமாக உயர்திரு .காவல்துறை கூடுதல் இயக்குனர் ஐயா அவர்கள் வருகை தந்து காவல் நிலையத்தில் செயல்பாடுகளையும் சுற்றுப்புற அமைப்புகளையும் பார்வையிட்டதில் காவல் நிலைய சுற்றுச்சூழலில் எழுதப்பட்டிருந்த திருக்குறள்களும், மனுதாரர்களுக்கு தனியாக காத்திருப்பு அறை ஏற்படுத்தப்பட்டு அதில் சட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியிருந்ததையும் , திருவள்ளுவர் பெயரிலே இருந்த சிறிய நூலகமும், அதில் உள்ள புத்தகங்களும் . மேலும் காவல் நிலையத்தில் உள்புற கட்டமைப்பு பொதுமக்களை கவரும் விதத்தில் எழுதப்பட்டிருந்த நேர்மறையான வாசகங்களும், சுற்றுப்புறத் தூய்மையும் வெகுவாக பாராட்டியும் மேலும் தென்தமிழகத்தில் முதல் காவல் நிலையமாக ISO தர சான்றிதழ் பெற்றமைக்கு பாராட்டியும், வாழ்த்துக்களும் சொல்லி மகிழ்வுடன் விடைபெற்றார்.