Police Recruitment

மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலிசாரின் போதை தடுப்பு விழிப்புணர்வு

மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலிசாரின் போதை தடுப்பு விழிப்புணர்வு

மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக பள்ளிகள் கல்லூரிகள் பல்வேறு சங்கங்கள் மற்றும் பொது இடங்களில் ANTI DRUG CLUB ஆரம்பிக்கப்பட்டு போதை பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதன்‌ 101,102,103 வது நிகழ்ச்சியாக முறையே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் அவர்களின் வழிகாட்டுதலின் படி இன்று சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரதி ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் நர்சிங் கல்லூரியில் ANTI DRUG CLUB ஆரம்பிக்கப்பட்டு போதை பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு போதைப் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் போதைக்கு பயன்படுத்தபடும் மாத்திரைகள் பற்றியும் போதைப் பொருள் புழக்கம் மற்றும் பழக்கம் பரவாமல் தடுக்க மாணவர்களால் காவல்துறைக்கு உதவ முடியும் என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் திருமதி.ஆனந்தி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பு ஆய்வாளர்கள் திரு.சுந்தரபாண்டியன் திருமதி.அமுதா
முதல் நிலை காவலர் திரு‌.வெங்கடேஷ்பாபு மற்றும் மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.