
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி வில்லாபுரத்தில் நடைபெற்றது.
மாநகர காவல் போக்குவரத்து துணை ஆணையர் வனிதா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு மிக குறைந்த அளவில் விபத்துகளில் உயிர் பலிகள் மிகவும் குறைந்துள்ளது. இது பொது மக்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காரணம் என்று தெரிகிறது – மாநகர் காவல் துணை ஆணையர் வனிதா.
மதுரை வில்லாபுரம் அரசில் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தி போக்குவரத்து காவலர்கள் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா கொடியசைத்து துவக்கி வைத்தார்.போக்குவரத்து காவல் கூடுதல் உதவி ஆணையர் திருமலை குமார்,உதவியாளையாளர்கள் செல்வின் இளமாறன்,போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தங்கப்பாண்டி நந்தகுமார் சோபனா கார்த்திக் ஆகியோர் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை வில்லாபுரம் ஆர்ச்சிலிருந்து துவங்கிய போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி ஜெயவிலாஸ், தெற்கு வாசல், சப்பாணி கோவில், கிரைம் பிரான்ச், வழியாக 3.5 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி பெரியார் நிலையம் சென்றது.
போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி துவங்கி வைப்பதற்கு முன்னதாக காவல் துணை ஆணையர் வனிதா மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் கூறுகையில் மதுரை மாநகரில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு விபத்துக்கள் குறைந்து உயிரிழப்பு மற்றும் உடல் சேதம் மிகவும் குறைந்துள்ளது.
போக்குவரத்து விபத்தில் 15 உயிர் பலிகள் 55 காயங்கள் ஆகியவை மட்டுமே நடைபெற்றுள்ளது மேலும் வருங்காலங்களில் விபத்திலா பயணத்தை உறுதி செய்ய இந்த போக்குவரத்து பேரணி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் தாங்கள் தானாக முன்வந்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பிரச்சாரம் செய்கின்றனர்.
பொதுமக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டதால் விபத்துக்கள் குறைந்துள்ளது. இனி வரும் காலங்களில் விபத்தில்லா பயணத்திற்கு போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பயன்படுத்தி தலைகவசம் அணிந்து தங்கள் பயணத்தை பாதுகாப்பாக உறுதி செய்து கொள்ள மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வேண்டுகிறோம் என மாநகர காவல் துணை ஆணையர் வனிதா கூறினார்.
