மதுரை மாவட்டம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மகா சபையினர் கைது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பழைய பேருந்து நிலையத்தில் 60க்கும் மேற்பட்ட அகில பாரத இந்து மகா சபையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் தலைமையில் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதுகுறித்து அகில பாரத இந்து மகா சபை மாநில இளைஞரணி செயலாளர் ராஜா பேசுகையில்:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வலியுறுத்தி ஆண்டுதோறும் இந்து அமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.
ஆனால் இந்த அரசு இது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருப்பரங்குன்றத்தில் குதிரை சுணை என்னும் இடத்தில் கோவில் நிர்வாகம் சார்பாக கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது
அது இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றக்கூடிய இடம் அங்கு தீபத்தை ஏற்றி வழிபடுங்கள் என்று இந்த திராவிட அரசு கூறுவது கண்டிக்கத்தக்கது.
வங்கதேசம் போல் தமிழகம் மாறி கொண்டு வருகிறது கஸ்தூரிக்கு ஒரு நியாயம் இசை வாணிக்கு ஒரு நியாயம்? வேறொரு மதத்தை சேர்ந்தவர் இந்து மதத்தை இழிவுபடுத்தி பாடல் பாடியது கண்டிக்கத்தக்கது அவர் மீது பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தும் இதுவரை இந்த திராவிட அரசும் காவல்துறையினரும் அதற்கு செவி சாய்க்கவில்லை இசைவாணி சுதந்திரமாக சுற்றித் திரிகிறார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.