மதுரை மாநகரில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாநகர் காவல் ஆணையாளர் அவர்களின் பாராட்டுக்கள்
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகரில் சென்ற மாதம் (நவம்பர்) திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைவாக கண்டறிவது, போதைப் பொருள்களின் புழக்கம் மற்றும் விற்பனையை தடுப்பது மற்றும் நீதிமன்ற அலுவல்களில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவது போன்ற நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய 24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களை நேரில் அழைத்து மதுரை மாநகர காவல் சார்பாக, மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பணவெகுமதிகள் வழங்கி வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார்.