மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம்
மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்தினை தடுக்கும் பொருட்டு பைபாஸ் சாலை மற்றும் குரு தியேட்டர் சந்திப்பு சாலைப் பகுதிகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் அவர்கள் நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து), மற்றும் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இருந்தனர்.