மதுரை நகரில் போக்குவரத்து போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை குறைவு
மதுரை நகரில் போக்குவரத்து போலீஸாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை குறைந்துள்ளது அதே சமயம் விபத்தில் இறந்தோரில் டூவீலரில் வந்தவர்கள் நடந்து சென்றவர்களே முதல் இரு இடங்களில் உள்ளது காவல்துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மதுரை நகரில் வாகன பெருக்கம், போக்குவரத்து விதி மீறல், மோசமான ரோடு, கவனக் குறைவு போன்ற காரணங்களால் தினமும் சாலை விபத்து நடப்பது வாடிக்கையாக்கிவிட்டது வழக்கு பதிவு, அபராதம் விதித்தாலும் விபத்துகளில் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஆண்டுதோறும் சராசரியாக 600 க்கு மேற்பட்ட விபத்துக்கள் நடக்கின்றன.150 க்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர் இந்த எண்ணிக்கையை குறைக்க போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால் கடந்தாண்டை விட இந்த ஆண்டு விபத்துக்களில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
2022 ம் ஆண்டில் நடந்த 690 சாலை விபத்துக்களில் 171 பேர் இறந்தனர்.519 பேர் காயமுற்றனர் கடந்த ஆண்டில் 703 விபத்துகளில் 235 பேர் இறந்தனர். 468 பேர் காயமுற்றனர். இந்தாண்டு நவம்பர் 30 வரை நடந்த 610 விபத்துக்களில் 217 பேர் இறந்தனர். 393 பேர் காயமுற்றனர். கடந்தாண்டு விட இந்த ஆண்டு இறப்பு குறைய போக்குவரத்து அமலாக்கத் திட்டங்களை செயல்படுத்தியதே காரணம் என்கிறார் போக்குவரத்து துணை கமிஷனர் வனிதா,
போலிஸ் கமிஷ்னர் லோகநாதன் அறிவுரைப்படி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் குறிப்பாக 10 சாதாரண விபத்துக்கள், ஐந்து இறப்பு நடந்த இடங்களில், விபத்து காரணம் குறித்து பிற துறைகள், கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ஆய்வு செய்து அங்கு தேவையான மாற்றங்களை செய்து வருகிறோம்
இதில் 75 blogspot 25 hotspotகளை கண்டறிந்து அங்கு விபத்து தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் முக்கிய சந்திப்புகள் மற்றும் சிக்னல் பகுதியில் போக்குவரத்து விதிமீறலை கண்டறிந்து தடுத்து வருகிறோம்.
விபத்தில் இறந்தவர்களில் டூவீலரில் வந்தவர்களும் நடந்து சென்றவர்களும் தான் அதிகம் இந்தாண்டு சில போக்குவரத்து திட்டங்களை அமல்படுத்த உள்ளோம் இதன் மூலம் விபத்துகள் உயிரிழப்பு இன்னும் குறையும் இவ்வாறு கூறினார்.