போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 02 நபர்களில் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,10,000/- அபராதமும் மற்றொரு நபருக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.60,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
24.01.2025 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து அதனை மொபைல் போனில் பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய நத்தம் விளாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆண்டி அம்பலம் (40) என்பவரையும், அவரது மனைவி சீரின் ஜெனத் (40) என்பவரையும் நத்தம் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சிவராமகிருஷ்ணன் அவர்கள், நீதிமன்ற தலைமை காவலர் திரு.கருணாகரன் அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.மைதிலி அவர்களின் சீரிய முயற்சியால் (24.01.2025) இன்று திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளிகளான ஆண்டி அம்பலம் என்பவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,10,000/- அபராதமும், அவரது மனைவி சீரின் ஜனத் என்பவருக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.60,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.